Wayanad Landslide: பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு!

Advertisements

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர்மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில், மத்திய அமைச்சரவை குழு ஆய்வு செய்தது. அப்போது மத்திய அமைச்சரவை குழுவைச் சந்தித்து, நிவாரண பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனக் கேரள அரசின் அமைச்சரவை குழு வலியுறுத்தி உள்ளது. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராகப் பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் வயநாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காகப் பிரதமர் மோடி கேரளா வந்தடைந்தார். தனி விமானம்மூலம் கண்ணூர் வந்த பிரதமர் மோடியை கேரள ஆளுநர், முதல் மந்திரி ஆகியோர் வரவேற்றனர். கண்ணூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக வயநாட்டிற்கு சென்று பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *