மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு!

Advertisements

சேலம்:

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

அதே நேரம் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்ததால் அணையிலிருந்து குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விடக் குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.32 அடியாக உயர்ந்து காணப்பட்டது. மேலும் அணைக்கு நேற்று வினாடிக்கு 25 ஆயிரத்து 98 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 14,404 கனஅடியாகக் குறைந்தது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 86.20 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *