Virudhunagar:தங்கை தாலி அறுத்தாலும் பரவாயில்லை! காதலன் ஆணவக்கொலை!

Advertisements

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் கார்த்திக் பாண்டி என்பவர் ஆணவக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் பாண்டி(24). இவர் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பொன்னையாவின் மகள் நந்தினி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் ஐயம்பட்டியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் சூப்பர் மார்கெட்டில் வேலை பார்த்து வரும் மனைவியை அழைத்துச் செல்வதற்காக நேற்று இரவு கார்த்திக் பாண்டி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக் பாண்டியை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் பாண்டி உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காதல் திருமணம் செய்த கார்த்திக் பாண்டியை அவரது மனைவியின் அண்ணன்களான பாலமுருகன், தனபாலன் உள்ளிட்ட 3 பேர் ஆணவக்கொலை செய்ததது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *