
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் ‘கிடுகிடு’வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது.
அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது.
அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.105 உயர்ந்து, ரூ.7 ஆயிரத்து 810-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.840 உயர்ந்து ரூ.62 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,905-க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,240-க்கும் விற்பனையாகிறது.
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
