
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து விலை தங்கத்தின் விலை தாறுமாறாகக் குறைந்து வருகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள்மீதான சுங்க வரி 15 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகவும், பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இதனால் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.4000 வரை குறையக்கூடும் என நகை வியாரிகள் கூறிவருகின்றனர். அதன்படி தங்கம் தொடர்ந்து 3வது நாளாகக் குறைந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரன் ரூ. 3,240 குறைந்ததை அடுத்து நகை வாங்க மக்கள் நகைக்கடையில் குவிந்து வருகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,875-க்கு விற்பனையானது.
இன்றைய (ஜூலை 25) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,885-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,080-ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை 3 ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

