2028 Summer Olympics: கிரிக்கெட் போட்டி சேர்ப்பு!

கிரிக்கெட் போட்டி சேர்ப்பு.

முப்பை: எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாகத் மும்பையில் நடைபெற்ற  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வில்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதில் பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்த விளையாட்டுப் பட்டியலை உறுதி செய்துள்ளதாகவும். இது தொடர்பாக ஒலிம்பிக் திட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, இன்று மும்பையில் நடைபெற்ற  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வில்   அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: கடந்த 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டு உள்ளது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. இத்தகைய சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தப் பரிந்துரை தொடர்பாகத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.

“லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். நூறாண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *