நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு!

Advertisements

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இடை த்தேர்தல் நடைபெறுகிறது.

இதில், இடைத்தேர்தலில் போட்டியிட 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சையென 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று மதியம் 3 மணிவரை அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு பெற்று, இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன்மூலம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சீன்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சித் தரப்பில் கரும்பு விவசாயி சின்னம் கோரப்பட்ட நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் மறுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *