Virudhachalam Bus Accident: அரசு பேருந்துகள் மோதி விபத்து!

Advertisements

Virudhachalam Bus Accident: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு பேருந்துகள் மோதிக்கொண்டதில் பத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் சாலையில் எடையூர்கிராமத்திலிருந்து பள்ளி மாணவிகள்,நர்சிங் கல்லூரி மாணவிகள்மற்றும் பயணிகளை ஏற்றிக் கொண்டுவிருத்தாசலம் நோக்கி வந்துகொண்டிருந்தது.

அப்போது  சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த அரசு குளிர்சாதன பேருந்து அரசு நகர பேருந்தின்பின்னால்மோதியதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக  அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம்விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குஅழைத்துவரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் உட்பட பத்துக்கு மேற்பட்டவருக்குதலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட களுக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *