
குடிபோதையில் தகராறு செய்ததாக நடிகர் விநாயகன் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 28 ஆண்டுகாலமாக மலையாள திரை உலகில் நடித்து வரும் நடிகர் விநாயகன் தமிழில் முதல் முறையாக விஷால் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சிம்புவின் சிலம்பாட்டம் மற்றும் காலை, கார்த்தியின் சிறுத்தை, தனுஷின் மரியான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தையும் தாண்டி ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்து இவர் புகழின் உச்சிக்கே சென்றார். இந்த நிலையில் குடிபோதையில் அவர் தகராறு செய்ததாகவும், அதனால் அவர்மீது வழக்குப் பதிவு செய்து எர்ணாகுளம் காவல் நிலையத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ ஒன்றும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் விநாயகன், தனது குடியிருப்பு பகுதியில் சில பிரச்சினைகளை உருவாக்கியதாகக் கூறி அவரை எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது காவல் நிலையத்திற்கு சென்ற விநாயகன், காவல்நிலையத்தில் பிரச்சனை செய்ததற்காகவும், அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனையடுத்து “மருத்துவ பரிசோதனைக்காக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்,” என்று அதிகாரி மேலும் கூறினார்.
கேரளா – எர்ணாகுளம் காவல் நிலையத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடிகர் விநாயகன் கைது#Vinayagan #Jailer #Kerala pic.twitter.com/YtRA59GYRp
— Kᴀʙᴇᴇʀ – ஆட்டோ கபீர் (@Autokabeer) October 24, 2023

