Oklahoma judge: பதவி நீக்கமா?

Advertisements

ஓக்லஹோமா நீதிபதி பதவி நீக்கமா?

கொலை வழக்கு விசாரணையின்போது சமூக ஊடகங்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதற்காகவும் ஸ்க்ரோலிங் செய்ததற்காகவும் ஓக்லஹோமா நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

லிங்கன் கவுண்டி மாவட்ட நீதிபதி ட்ரேசி சோடர்ஸ்ட்ரோம் ஒரு கொலை வழக்கை விசாரித்து வந்தார். அந்த விசாரணையின்போது குறுஞ்செய்திகளை அனுப்புவதும் சமூக ஊடகங்களை ஸ்க்ரோலிங் செய்வதும் கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு நீதிபதியே வழக்கை விசாரிக்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்தியது தவறு. எனவே  வேலையை இழக்கும் தருவாயில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓக்லஹோமா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி செவ்வாயன்று தாக்கல் செய்த ஒரு பதிவில், நீதித்துறை புகார்களுக்கான மாநில கவுன்சிலின் விசாரணையைத் தொடர்ந்து, புதிய நீதிபதியைப் பணியில் அலட்சியம் செய்ததற்காகப் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *