
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், ராஷி கண்ணா அவரின் சகோதரியும், நடிகையுமான வாணி கபூருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய போட்டோஸ் வைரலாகி வருகிறது.
நடிகை ராஷி கண்ணா… கடந்த 2013 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான ‘மெட்ராஸ் கபே’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும், இவருக்குக் கைக்கொடுத்தது என்னவோ தென்னிந்திய திரைப்படங்கள் தான்.
நடிகர் நாகார்ஜுனா, நாகசைதன்யா, ஸ்ரேயா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்த… ‘மனம்’ திரைப்படத்தில் ராஷி கண்ணாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தெலுங்கு படங்களில் பிஸியானார்.

கவர்ச்சிக்கு கருப்பு கொடி காட்டாமல்… பாடல்கள் முதல் படுக்கையறை காட்சிகள்வரை தாராளம் காட்டியதால், தெலுங்கு பட இயக்குனர்கள் இவரை ஹீரோயினாக நடிக்க வைக்கப் போட்டி போட்டனர்.
இவர் காட்டிய கிளாமர்… தமிழ் ரசிகர்களின் கண்களையும் கவர்ந்த நிலையில், நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’, விஷாலுக்கு ஜோடியாக ‘அயோக்யா’, விஜய் சேதுபதியுடன் ‘சங்க தமிழன்’, ‘துக்ளக் தர்பார்’, தனுஷுடன் ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற பல படங்களில் நடித்தார்.

அடுத்தடுத்து இவரின் கைவசம் மூன்று தமிழ் படங்கள் உட்பட சில தெலுங்கு படங்களும் உள்ளது. சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா தற்போது… கண்ணைப் பறிக்கும் கவர்ச்சியில் கிருஸ்துமஸை முன்னிட்டு வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது. குட்டை பாவாடையில், தன்னுடைய சகோதரி வாணி கபூருடன் ராஷி கண்ணா எடுத்துக் கொண்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

