இனி ஒரு உயிரும் போக வேண்டாம் – ஸ்டாலின் வேண்டுகோள்..!

இந்தி எழுத்து அழிப்புப் போரட்டத்தின்போது இனி ஒரு உயிரும் போக வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில், இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது, உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் சிவா திலீபன் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது என்றார்.
தொடர்ந்து அவரை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும், தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட  குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும் என்றும், இனி ஒரு உயிரும் போகக் கூடாது என்றும் தெரிவித்தார். மேலும், இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும், மனவுறுதியாலும், தமிழ்ப்பற்றாலும் தான் வீழ்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *