
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள47ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரிபுதுவை கிராமணியார் நாடார் பேரவை சார்பில்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிராமணியார், நாடார், துளுவெளாளர், அச்சிரப்பாக்கம் செட்டியார், பெரியசெட்டியார், மஞ்சபுத்தூர், செட்டியார், வடம் பார் செட்டியார், யாசுவா, தியா, இருளர்.வேட்டைகாரர், இசை வேளாளர், ஜனகம். கலவந்துலா, காமசாவர், கன்டை தேவங்கா, தெலுங்கு ருமார், கல்தச்சர், யாதவா, யாதவ பிள்ளை, யாதவ நாயுடு முத்துராஜா, நரிகுறவர், ஆகிய ஜாதிகள் உள்பட 47 ஜாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சகம் கடந்த23-2-2007ல் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு அனுமதிவழங்கி சுமார் 17 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மேற்கண்ட ஜாதிகளுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்காமல் உள்ளது.
மேலும் மத்திய அரசு அனுமதி வழங்கிய ஒதுக்கீடு உத்தரவு ஆணையை நடைமுறைப்படுத்தக் கோரி புதியஞ்சாலை காவல் நிலையம் எதிரில் அண்ணா சிலை முன்பு பேரவை காப்பாளர் எம்பி மதி மகாராஜா முன்னிலையில் தலைவர் ஏசி. புரந்தரதாசன் தலைமையில் புதுச்சேரி அரசைக் கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில்புதிய நீதி கட்சி தலைவர் பொண்ணுரங்கம், தமிழர் களம் கோ.அழகர்,
தலித்மக்கள் பாதுகாப்பு இயக்கம்பி.பிரகாஷ், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்புசீ.சு.சுவாமிநாதன், பேரவை நிர்வாகிகள் ஓம்சக்தி நடராஜன், காரைக்கால் மாவட்ட தலைமை பொறுப்பாளர்கள்:
சிவானந்தம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

