Book Fair: கண்காட்சியை காண திரண்ட மாணவ மாணவிகள்!

Advertisements

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.
தினமும் காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. சுமார் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் 10 சதவீதம் வரை புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. தலைவர்களின் வரலாறு மற்றும் அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள், உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் உள்ளன. இந்த புத்தக கண்காட்சிக்கு மாவட்டம் முழுவதும் இருந்து திரளான மாணவ மாணவிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.

புத்தகங்கள் குறைவான விலையில் விற்கப்படுவதால் மாணவ மாணவிகள் புத்தகங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இந்த புத்தகத்தின் காட்சி அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை நடக்க உள்ளது.

இதுகுறித்து ஆசிரியை ஒருவர் கூறுகையில் மாணவ மாணவிகளுக்கு இந்த புத்தக கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து புத்தக கண்காட்சி பார்த்து புத்தகங்களை வாங்கிச் செல்ல வேண்டும். குழந்தைகளை படிக்க ஊக்குவிக்க வேண்டும். என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *