Vijayakanth passed Away: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி!

Advertisements

கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகக் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அலை அலையாய் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில், நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் கவுண்டமணி, இயக்குனர் டி.ராஜேந்தர், கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினர்.

எங்கள் மண்ணின் மைந்தர் மறைவு வேதனை அளிக்கிறது- பிடிஆர்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், சிறந்த திரைக்கலைஞரும், எங்கள் மதுரை மண்ணின் மைந்தருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் – தொண்டர்களுக்கும் – இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கேப்டனுக்கு மரியாதை செலுத்திய காவலர்கள்…!

விருகம்பாக்கம் வழியாக விஜயகாந்த் உடலைக் கொண்டு செல்லும்போது துப்பாக்கி ஏந்தி சல்யூட் அடித்துக் காவலர்கள் மரியாதை செலுத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *