ஆட்சி அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள் – திருமாவளவன்!

Advertisements

பழநி: 

தமிழகத்​தில் விடுதலை சிறுத்​தைகள் கட்சிமீது நம்பிக்கை வரும்போது மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கொடுப்பார்கள் என்று கட்சித் தலைவர் திரு​மாவளவன் கூறினார்.

பழநி​யில் பல்வேறு நிகழ்ச்​சிகளில் பங்கேற்​ப​தற்காக நேற்று வந்த திரு​மாவளவன் மலைக் கோயிலுக்​குச் சென்று தண்டா​யுத​பாணி சுவாமி, போகர் ஜீவச​மா​தி​யில் தரிசனம் செய்​தார். பின்னர், படிப்​பாதை வழியாக அடிவாரத்​துக்கு வந்த அவர், புலிப்​பாணி ஆசிரமத்​தில் சுவாமி தரிசனம் செய்​தார். அங்கிருந்து வெளியே வந்த அவரைச் சூழ்ந்த சாலையோர வியாபாரி​கள், தங்கள் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று வலியுறுத்​தினர்.

பின்னர் திரு​மாவளவன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பழநி முருகன் கோயிலுக்கு உட்பட்ட மெட்​ரிக். பள்ளி​யில் 6 முதல் 16 ஆண்டுகள்வரை உரிய கல்வித் தகுதி​யுடன் தொகுப்​பூ​தி​யத்​தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களைப் பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும். அறநிலையத் துறை கட்டுப்​பாட்​டில் இயங்​கும் பள்ளி, கல்லூரி​களில் 5 ஆண்டு​களுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களைப் பணி நிரந்​தரம் செய்வது குறித்து துறை அமைச்சர் சேகர்​பாபு பரிசீலனை செய்ய வேண்​டும்.

நீதி​மன்ற உத்தரவைக் காரணம் காட்டி பழநி மலையடிவாரத்தில் சாலையோர வியாபாரி​கள், தங்களது வியாபாரத்தை செய்ய விடாமல் தடுக்​கப்​படு​கின்​றனர். தமிழக அரசு அவர்களுக்குரிய வழிகாட்டு​தல்களை வழங்கி, அவர்​களின் வாழ்​வா​தா​ரத்தை உறுதிப்​படுத்த வேண்​டும். ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் கொடுக்​கும் தீர்ப்பு. தமிழகத்​தில் விடுதலை சிறுத்​தைகள் கட்சிமீது நம்பிக்கை வரும்​போது, பொது​மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கொடுப்பார்கள். ஆட்சி அதிகாரம் என்பது உழைப்​புக்​கும், அர்ப்​பணிப்​புக்​கும் கொடுக்​கும் அங்​கீ​காரம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *