ஆதவ் அர்ஜுனா இடையே கடும் மோதல்?

Advertisements
தமிழக வெற்றி கழக தலைவர் ஆன விஜய்க்கும் அவருக்கு ஆலோசனைகள் சொல்வதுடன் வழிகாட்டியாகவும் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும்இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது அதன் காரணமாக ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தை விட்டு விலகலாம் என பரபரப்பு தகவல் வெளியே கசிந்து இருக்கிறது
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் ஆதவ் அர்ஜூனா தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவி உள்பட பல முக்கிய பணிகளை செய்து வருகிறார்
இது மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளை கூட்டணி சேர்க்கும் பணிகளையும் விஜய் ஒப்படைத்து இருந்தார்
இதன் நிமித்தமாகவே கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு அங்கீகாரம் தரப்படும் அமைச்சரவையிலும் பதவி தரப்படும் என விஜய் அறிவித்திருந்தார்
ஆனால் அவர் நினைத்தது போல் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை
இது போன்றுஸகூட்டணி சேராமல் போனதற்கு ஆதவ் அர்ஜுனா தான் காரணம் என முடிவெடுத்த விஜய் ஆதவ் அர்ஜுனாவை அழைத்து திட்டி தீர்த்திருக்கிறார்
ஆரம்ப காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பதற்கு விரும்பியது. ஆனால் திரை மறைவில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் நிச்சயமாக கூட்டணி சேரும் என்றும் ஆதவ் அர்ஜூனா தகவல் தெரிவித்து வந்தார் இதனை விஜய் விரும்பவில்லை திரை மறைவில் எதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டியதுதானே என்ன அவர் கடிந்து கொண்டார்
ஆதவ்ஸஅர்ஜுனா முதல் கட்டமாக முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனை தமிழக வெற்றி கழகத்தில் இணைய வைத்தார் இதனை ஒட்டி ஆதவ் அர்ஜுனா மீது அதிக நம்பிக்கை கொண்ட விஜய் இதுபோல் பல தலைவர்களையும் நமது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்
இதன் அடிப்படையில் டிடிவி தினகரன் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் ஆதவ்அர்ஜுனா டிடிவி தினகரன் தானாகவே நம்மை தேடி வருவார் அவரை நாம் தேடி போக வேண்டியது இல்லை என்ற கருத்தில் இருந்தார்
டிடிவி தினகரனோ நான் அரசியலுக்கு வந்து நீண்ட காலம் ஆகிறது இவர்கள் இப்பொழுது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் ஆனால் என்னை வந்து சந்திக்க மறுக்கிறார்கள் என்கிற ரீதியில் அவர் கோபமடைந்தார் இதனால் டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் போனது
இதே போல் பிரேமலதா விஜயகாந்த் தமிழக வெற்றி கழகத்தில் சேர்வதற்காக விருப்பம் தெரிவித்தார் ஆனால் அவரிடமும் ஆதவ் அர்ஜூனா சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை
இது மட்டுமல்லாமல் மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்வதற்காக முயற்சி செய்தார்கள் ஆனால் அங்கு செங்கோட்டையன் நடத்தப்படும் விதம் குறித்து அவர்கள் அறிந்த நிலையில் தங்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் சரியான மரியாதை இருக்காது என்று கருதி  திமுகவில் இணைந்து விட்டார்கள்
இதுபோன்று கூட்டணி கட்சியினர் அனைவரும் திமுகவில் சேர்ந்து விட்ட நிலையில் ஆதவா அர்ஜுனாவை அழைத்து விஜய் மிகப்பெரிய கண்டனம் தெரிவித்திருக்கிறார் சுமார் அரை மணி நேரம் ஆதவ் அர்ஜூனா இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது
கூட்டணி சரியாக அமையாமல் போனதற்கு காரணம் ஆதவ் அர்ஜுனா தான் என குற்றம் சாட்டி விஜய் பேசியிருக்கிறார்
இதனை தொடர்ந்து விஜய்க்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்று இருக்கிறது இதனைத் தொடர்ந்துஆதவ் அர்ஜுனா தற்பொழுது மிகுந்த மன குழப்பத்தில் இருக்கிறார் ஏற்கனவே தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் மோதி வரும் சூழ்நிலையில் ஏன் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என அவர் ஆலோசனை செய்வதாக நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள் எனவே ஆதம் அர்ஜுனாதமிழக வெற்றி கழகத்தை விட்டு எந்ங நேரமும் விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *