உலகக்கோப்பை மகுடம் யாருக்கு?

அகமதாபாத்தில் ஆண்கள் உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று விளையாட உள்ளன.

அகமதாபாத்தில் 10 ஆவது ஆண்கள் உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18 இல் இந்தியாவும் 11 இல் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

இதைத் தொடர்ந்து, இருபது உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதியதில் 3 ஆட்டத்திலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மூன்றாவது முறை இருபது உலகக் கோப்பை போட்டியை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைக்குமா? எனக் கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *