பழிவாங்கத் தொடங்கிய தவெக.. அன்பில் மகேஷ் கைது? நடுங்கும் திமுக தலைகள்.!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துட்டு இருக்கு. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளை பெற்றுத்தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி என மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதா காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணி பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு…

தனியார் பள்ளிகள் கட்டணம் அதிகமா இருக்குனு பொதுமக்கள் குற்றம் சாட்டுறத நாம்ம கேட்டு இருக்கோம். அப்படி தனியார் பள்ளிகளின் கட்டணம் உயர்ந்ததுக்கு காரணமே முந்தய ஆட்சியாளர்கள் தான் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சார்பில் குற்றசாட்டை முன்வைத்தனர். தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க 5 லட்சம் ரூபாயும் , சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 25 லட்சம் ரூபாயும் கட்சி நிதியாக கடந்த திமுக ஆட்சியில் பெறப்பட்டதாக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொது செயலர் இளங்கோ தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கவும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையின்மை சான்றிதழை வழங்கவும் இப்போதைய தவேக அரசு பணம் வாங்கவில்லை என்றும் தெரிவித்தனர்.அதைத்தொடர்ந்து, அங்கீகாரத்தை புதுப்பிக்க, தடையில்லா சான்றிதழ் வழங்க , தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க, பள்ளிகளின் தர உயர்வு, DTCP உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர் அரசகுமார் ஜூன் 27ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் அரசகுமாரின் உறவினர்கள் ஆரோக்கியராஜ், சுரேஷ் என அடுத்தடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டு இருகாங்க.

மேலும் அரசகுமார் மற்றும் அவரோட குடும்பத்தினருக்கு தொடர்புடைய 20 வங்கி கணக்குகள் மற்றும் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் என்பவருக்கு தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு, அவற்றில் நடைபெற்ற நிதிப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 177-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் புகார் அளித்துள்ளதாகவும் , 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை அடுத்த கட்டத்தை எட்டிய நிலையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

திருச்சியில் அவரது வீட்டில் 8 மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில், சென்னையிலும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவரது உதவியாளராக இருந்த அருண் வீடு, அன்பில் மகேஸின் நெருங்கிய உறவினர் வாளாடி கார்த்தியின் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள வீடு ஆகியவற்றிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.சோதனையின் முடிவில் 118 ஆவணங்கள்,18 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 8 பென்டிரைவ்கள், 2 ஹார்டு டிஸ்க்குகள், ஒரு டேப்லெட், ஒரு ஐபேட் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இங்கேதான் அரசியல் பரபரப்பு தொடங்குகிறது!இரண்டு வாரங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது, அவரது வீட்டுக்கு அன்பில் மகேஸ் சென்று உடனிருந்து ஆதரவளித்தார். இந்நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் நேற்று சோதனை நடந்த போது கே.என்.நேரு அண்ணா நகரில் உள்ள மகேஸ் வீட்டுக்கு வந்தபோது போலீஸார் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.இதனால் அங்கு திமுகவினர் திரண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.இதற்கிடையே  இந்த சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், அன்பில் மகேஸ் வீடுகளில் சோதனை என்பது மற்றுமொரு திசை திருப்பும், அரசியல் பழிவாங்கும் நட வடிக்கை.

தமிழகம் முழுவதும் மின் வெட்டு, மக்கள் போராட்டம், மீனவர் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாடு, ராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டு கொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்துல பேசும்போது,

பல பேரோட ஊழல் file என் டேபிள்ல தான் இருக்குனு சொல்லி இருந்த நிலையில், இப்போ தொடர்ச்சியா செந்தில்பாலாஜி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் என வரிசையா பெரிய தலைகளாம் லஞ்ச ஒழிப்பு துறைகிட்ட சிக்கிட்டு இருக்காங்க. அதாவது ஒருபக்கம் ரூ.100 கோடி மோசடி புகார் மறுபக்கம் அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டு! இரண்டுக்கும் நடுவில் தற்போது sசிக்கி தவிப்பது அன்பில் மகேஷ் தான். மேலும், தனியார் பள்ளிகளிடம் இருந்து அரசு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளும் இந்த வழக்கில் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.

ஆனால் முக்கியமான விஷயம் இந்த வழக்கில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் விசாரணை நிலையில்தான் உள்ளன. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அன்பில் மகேஷிடம் விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்கிறதா? கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் என்ன இருக்கிறது? இந்த வழக்கில் மேலும் யார் யார் சிக்கப் போகிறார்கள்? அரசியல் பழிவாங்கல் என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு அரசு தரப்பின் பதில் என்ன? என்ற கேள்விகள் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளன. அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் இந்த விவகாரத்தில் இன்னும் எந்த மாதிரியான அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *