‘கட்டா குஸ்தி 2’ டிரெய்லர் வெளியீடு – ஜூலை 3-ல் திரைக்கு வருகிறது!

2022-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகம், தற்போது ‘கட்டா குஸ்தி 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இப்படம் வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கருணாஸ் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் இந்த இரண்டாம் பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ரம்யா பாண்டியன் மற்றும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் புதிய வரவுகளாக இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் ரசிகர்களைக் கவர்ந்து வசூல் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *