சூரி படத்தில் எனக்கு வாய்ப்பு – விஜய்சேதுபதி!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் விஜய்சேதுபதி, “சூரி மாதிரியான பெரிய ஹீரோ அவரது படத்தில் எனக்குப் பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அற்புதமாக நடித்திருக்கிறார். கென் கருணாஸூக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சேத்தன் சாரின் நடிப்பு என்னைப் பிரமிக்க வைக்கிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச்சரியான தேர்வு அவர். அவரைத் தவிர வேறு யாரையும் ரீபிளேஸ் செய்ய முடியாது.

ஜாக்கி சாரின் செட் காலத்தைக் கடந்து எங்களைக் கூட்டி சென்று அந்தக் காலத்தில் வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்தது. பவானி, தமிழ் சார் அனைவருக்கும் வாழ்த்துகள். உணர்வுகளை இசையாக மாற்றுபவர் ராஜா சார். அவரின் இசைமூலம் எனக்குப் பேரானந்தம் கொடுத்த ராஜா சாருக்கு நன்றி. அவரது பேச்சும் வாழ்க்கையில் பல புரிதல்களை எனக்குக் கொடுத்தது. இது முழுக்க முழுக்க வெற்றிமாறன் மட்டுமே உரிமை கொண்டாடக்கூடிய படம். இந்தப் படம் உருவாக நாங்கள் உறுதுணையாக இருந்தோம். ஒருநாள் கூட அவர் சோர்ந்து போய் நாங்கள் பார்த்ததே கிடையாது. தயாரிப்பாளர் எல்ரெட் சார் இந்தப் படத்தைக் கிரீடமாகச் சுமந்து கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் நன்றி” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *