
பாலிவுட் நடிகை பரினீத் சோப்ராவை ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தானில் நடைபெற்றது.
புதுடெல்லி: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவரின் உறவுமுறை தங்கையான பரினீதி சோப்ராவும் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான பரினீதி 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
சமீப காலமாகப் பரினீதிக்கு பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னை பிசியாகவே வைத்துக்கொண்டார். இதனிடையே இவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சத்தாவை காதலித்து வருவதாக அரசல் புரசலாகப் பேசப்பட்டது. ஆனால் இருவரும் அதுகுறித்து வாய்திறக்கவே இல்லை.இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது தான் தங்களது காதலை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ராகவ் சத்தா எம்.பி., என்பதால் இவர்களது நிச்சயதார்த்த நிகழ்வில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட ஏராளமான அரசியல் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.இந்த நிலையில், திருமண தேதியை அறிவிக்காமல் சீக்ரெட்டாக வைத்திருந்த இந்த ஜோடி, நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர்.
இதில் பெரியளவில் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்பட சில பிரபலங்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

குறிப்பாகப் பரினீதி சோப்ராவின் அக்கா பிரியங்கா சோப்ராவே இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் சமூக வலைதளம் வாயிலாகத் தனது தங்கைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். காதல் திருமணம் செய்துகொண்ட பரினீதி – ராகவ் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
From the very first chat at the breakfast table, our hearts knew. Been waiting for this day for a long time .. So blessed to finally be Mr and Mrs!
Couldn’t have lived without each other .. Our forever begins now .. 💖 pic.twitter.com/M1xQ8BIHLt
— Parineeti Chopra (@ParineetiChopra) September 25, 2023


