ஆளுநரின் தேநீர் விருந்துக்கு விஜய் கட்சியினரை அழைப்பு!

குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் மாளிகை ராஜ் பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் கலந்து கொள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஎம் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *