தமிழகத்தில் எதிர்வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எதிர்பார்த்தபடியே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த இரு முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் ( தனித்தொகுதி): இத்தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் தவெகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
தாராபுரம் (தனித்தொகுதி): இத்தொகுதியில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து தவெகவைத் தேர்ந்தெடுத்த சத்யபாமா தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இவர்கள் இருவரும், தவெக ஆட்சி அமைந்த பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் கொடுத்து, தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இதன் காரணமாகத் காலியான இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சிப் பொறுேற்ற பிறகு எதிர்கொள்ளும் முதல் தேர்தல் களம் என்பதால், இந்தத் தேர்தல் தமிழக அரசியல் அரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சட்டமன்றத்தில் தங்களது கட்சியின் பலத்தை உயர்த்திக் கொள்ளவும், எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த இடைத்தேர்தல் வெற்றியைத் தவெக மிக முக்கியமானதாகக் கருதுகிறது.
மறுபுறம், தங்களை விட்டுச் சென்றவர்களிடமே தொகுதியை இழந்துவிடக் கூடாது என்ற கட்டாயத்தில் அதிமுகவும், ஆட்சியின் மீதுள்ள பிடியை வலுப்படுத்தத் திமுகவும் தீவிரப் பிரச்சார வியூகங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது..

