Earthquake In Bangladesh: கடுமையான நிலநடுக்கம்!

வங்காளதேசத்தின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள்  குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறித் திறந்த வெளிக்கு வந்தனர்.

வங்காளதேசத்தின் தெற்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகாகப் பதிவாகியிருந்ததாக ஜெர்மன் ஆய்வு மையம் தெரிவித்தது. 55 கிமீ ஆழத்தில், 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாகக் கட்டிடங்கள் கடுமையாகக் குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறித் திறந்த வெளிக்கு வந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *