கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த குடும்ப சங்கமம்..!

Advertisements

வெண்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து கலாச்சார குடும்ப சங்கம விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் வெண்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து கலாச்சார குடும்ப சங்கம விழா நடைபெற்றது. இவ்விழாவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி தலைமை தாங்கினார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக வெங்கடேசன்,சந்திரசேகர் ,குமார் ,ஆகியோர் கலந்து கொண்டு இந்து கலாச்சாரம் பற்றி சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வில், பரதநாட்டியம் , திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொன்னேரி சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *