
பொன்னேரியில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணி குறித்து திமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில், நகர செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், வருகின்ற 11 ஆம், தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சென்னை-விழுப்புரம் மண்டல திமுக பாக முகவர்கள் சந்திப்பு மாநாடு மற்றும், 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் களப்பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன.
அப்போது ஒன்றிய செயலாளர் ராஜா பேசியபோது, திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து நிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



