Nilgiri Mountain Railway: மீண்டும் ரயில் சேவை துவக்கம்!

நீலகிரி மாவட்டத்திற்கு 22 நாட்களுக்கு பிறகு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலை ரயில் சேவை துவங்கப்பட்டு 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது…

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது.இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு மரங்கள் விழுந்து போக்குவரத்து மற்றும் இரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து குன்னூர் மேட்டுப்பாளையம் இடையில் ஆன மலை ரயில் தண்டவாளத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு மரங்கள் விழுந்து தண்டவாளங்கள் சேதமடைந்தன.

அவ்வாறு சேதமடைந்த தண்டவாளங்களை சீர் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில்,தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மீண்டும் மீண்டும் ஒரு சில இடங்களில் தண்டவாளத்தில் பாறையில் விழுந்தும், மண் சரிவுகள் ஏற்பட்டும் சேதம் அடைந்தன.

தொடர்ந்து நான்கு நாட்கள்,ஐந்து நாட்கள் என மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து 22 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் மலை ரயில் சேவை இன்று காலை 7.10 மணியளவில் துவங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *