Varalaxmi Sarathkumar: பிளாக் கலர் நெட்டட் ட்ரெஸில் திணறடிக்கும் நடிகை!

Advertisements

வெகேஷன் சென்ற வரலட்சுமி சரத்குமார் வீடியோமற்றும்  புகைப்படங்கள் லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடாப் போடாப் படத்தின் மூலம் ஹீரோயினாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தனது வெகு இயல்பான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Advertisements

எனினும் உடனடியாகத் தமிழில் அவருக்குப் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.கன்னட நடிகர் சுதீப்புடன் இணைந்து மானிக்யா என்ற படத்தில் படத்தில் நடித்தார். இந்தப் படம் அந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக மாறியது.

தொடர்ந்து மலையாள திரையுலகிலும் அறிமுகமான வரலட்சுமி மீண்டும் தமிழுக்கு வந்தார். பாலா இயக்கிய தாரைத் தப்பட்டை படத்தில் நடித்தார். தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன் போன்ற படங்களில் நடித்தார்.
பின்னர் திடீரென நெகட்டிவ் ரோலில் நடிக்கத் தொடங்கிய வரலட்சுமி சர்க்கார், சண்டக்கோழி 2, மாரி 2 போன்ற படங்களில் வில்லியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.


இதனிடையே தனது உடல் எடையைக் குறைத்த வரலட்சுமி மீண்டும் ஃபிட்டாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.சமூக வலைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.


அந்த வகையில் வரலட்சுமி சமீபத்தில் வெகேஷன் சென்ற வீடியோவைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் புகைப்படங்களுக்கு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *