Vandavasi taluk: வெறிச்சோடி காணப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம்!

வந்தவாசியில்,12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மறியலையொட்டி அலுவலர்கள் சிறுவிடுப்பு எடுத்து வேலைக்கு வராததால்,வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம்.மாவட்ட தலைநகரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டதை யொட்டி, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் சிறுவிடுப்பு எடுத்து வேலைக்கு வராததால் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடியது.

1.4.2003 க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் சிபிஎஸ்-சை  கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். காலவரை யின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரி யர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப் பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவர்கள், களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தால், தங்களது தேவைகளுக்காக வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் அவதியடைந்தனர்.

வந்தவாசியில்,12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மறியலையொட்டி அலுவலர் சிறுவிடுப்பு எடுத்து வேலைக்கு வராததால்,வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *