Robbery: 30 சவரன் தங்க நகை கொள்ளை!

Advertisements

திருவண்ணாமலை அடுத்த அவலூர்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த அவலூர்பேட்டை சாலையில் உள்ள சேரியந்தல் பகுதியில் வசிக்கும் தனியார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பாபு என்பவருடைய வீட்டில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சுமார் 30 சவரன் தங்க நகைகளையும் மற்றும் பணம் எல்இடி டிவி உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்கள்.

கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தனது குடும்பத்துடன் சொந்த ஊரான திருவண்ணாமலை அடுத்த தாயனூர் கிராமத்திற்கு சென்றிருந்த நிலையில் சொந்த ஊரிலிருந்து இன்று காலை தனது வீட்டுக்கு வந்த நிலையில் வீட்டின் வாயிற் படி கதவு திறந்திருந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக  மருத்துவர் பாபு காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். அதனை தொடர்ந்து காவல்துறையினரின் கைரேகை நிபுணர் தற்போது பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *