
ஆட்சியாளர்களுக்குத் திரைத்துறை செழிப்பான துறையாக உள்ளது!
தமிழகத்தில் திரைத்துறை என்பது ஆட்சியாளர்களுக்குச் செழிப்பான துறையாக இருப்பதாகச் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.Vanathi Srinivasan
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் எனும் திட்டத்தைக் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக பைல்ஸ், எக்ஸ்பிரஸில் ஏறுகிறதா, ஜெட்டில் ஏறுகிறதா, என்பதை பார்க்கத்தான் போறோம். மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர்களே இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லை.
கொசு மருந்து அடித்ததை பார்த்ததே இல்லை, எனது சட்டமன்ற அலுவலகத்தில் கொசு அடிப்பதே என்னுடைய வேலையாக இருக்கின்றது. திரைத்துறை ஆட்சிகாரர்களுக்கு செழிப்பாக உள்ளது. அதைத் தாண்டி யாராவது படத்தை விட்டார்கள் என்றால் அவர்களுக்குத் தியேட்டர் கிடைக்காது. இதற்கு லியோ திரைப்படம் ஒரு முன் உதாரணம்.
இதனால் தான் ரெட்டிக்கு சாதகமாக இருக்கிறார்கள். மற்றவர்களுக்குப் பலனில்லை. ஒட்டுமொத்த திரைத்துறையை கையில் வைத்துள்ளனர். இதற்கு முன்னர் இப்படி இருந்த தால்தான் இவர்களின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது எனத் தெரிவித்தார்.

