Vaishali Rameshbabu: கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!

Advertisements

கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட வைஷாலி தேர்வாகி உள்ளார்.

சென்னை: பிரிட்டனில் நடைபெற்ற ‘பிட் (FIDE) கிராண்ட் ஸ்விஸ்’ செஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குந்துலுடன் வைஷாலி மோதினார். இந்த போட்டி டிராவில் முடிவுற்றது. எனினும் இத்தொடரில் அதிக புள்ளிகள் பெற்றவர் என்ற முறையில் சாம்பியன் பட்டத்தை வைஷாலி கைப்பற்றினார்.

Advertisements

இந்த வெற்றி மூலம் அடுத்தாண்டு கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாடவும் வைஷாலி தேர்வாகி உள்ளார். ஏற்கனவே ஆண்கள் பிரிவில் உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் அவருடைய சகோதரர் பிரக்ஞானந்தா கேண்டிடேட் தொடருக்கு தேர்வாகிய நிலையில் தற்போது வைஷாலியும் மகளிர் பிரிவில் தேர்வாகி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் வைஷாலிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக கவர்னர்ஆர்.என்.ரவி, செஸ் வீராங்கனை வைஷாலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது அபார ஆட்டம் மூலம் பட்டம் வென்ற வைஷாலிக்கு கவர்னர் வாழ்த்து தெரிவிப்பதாகவும், திறமை, உறுதிப்பாடு, இடைவிடாத உத்வேகம் ஆகியவற்றின் மூலம் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளார் எனவும் பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *