எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு.. நீதிமன்றம் கொடுத்த Shock.!

சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ள நிலையில், ரிசல்ட்டுக்காக தமிழகமே காத்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில் , கோவை தொண்டா முத்தூரை சார்ந்த விக்னேஸ்வரன் என்பவர் எஸ்.பி. வேலுமணி தனது வேட்புமனுவில் சொத்துக்களை மறைத்துள்ளாரா என விசாரணை நடத்தக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது சம்பந்தமாக அவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுக சார்பில் தொண்டமுத்தூரில் போட்டியிடும் எஸ்.பி. வேலுமணி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தாக்கல் செய்த சொத்து விவரங்களை தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுடன் ஒப்பிடும் போது அதிகளவில் உள்ளது.

அவர் சொத்து விவரங்களுக்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. எனவே வேலுமணி சொத்துக்களை மறைத்துள்ளாரா என வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கினை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்துள்ளனர்.. இதனையடுத்து நான்கு வாரங்களுக்குள் வருமான வரித்துறை இந்த வழக்கில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கினை தள்ளி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *