இரட்டை இலக்க எண்ணில் தான் சீட்..குழுப்பத்தில் திமுக..!

Advertisements
திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிற்கும், இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில் அதிக சீட்கள் கேட்பது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்து மேடையில் பேசியுள்ளார் சிபிஐஎம் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் பிரமாண்ட கூட்டணி அமைத்து ஆளும் திமுக தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்தக் கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ், மதிமுக, கொமதேக, முஸ்லீம் லீக், மமக உட்பட பல கட்சிகளுக்குக்கான தொகுதிப் பங்கீட்டைத் திமுக முடித்திருக்கிறது. ஏற்கனவே, கூட்டணியில் நிறைய கட்சிகள் உள்ளதால், குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என முதல்கட்ட தொகுதிப் பங்கீட்டின்போதே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது திமுக.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தலைமையிலான குழுவினர் திமுகவுடன் இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இம்முறை கூடுதல் தொகுதிகளை அவர்கள் கோரியுள்ளதாகத் தெரிகிறது.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே கடந்த முறையை விட அதிக இடங்களைக் கேட்கின்றன. கூட்டணியில் தேமுதிக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் பிற சிறிய கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதால், பழைய கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையைச் சற்று குறைக்க திமுக விரும்புவதாகத் தெரிகிறது.
சிபிஐ(எம்) கட்சியுடன் ஏற்கனவே இரு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கும் நிலையில், இன்னும் எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை. அக்கட்சியின் தலைவர்கள் இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் கடந்த தேர்தலை விட 2 இடங்களை குறைவாகவே திமுக தர முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் நாங்கள் அதிக இடங்களை கேட்பது ஏன் என்பது குறித்து சிபிஐஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷணன் விளக்கம் அளித்துப் பேசி உள்ளார். விழுப்புரம் அருகேயுள்ள கண்டாச்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க நிதியளிப்பு பிரச்சார பொதுக்கூட்டம் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், “திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதிகமான எண்ணிக்கையில் சட்டமன்றத்திற்கு சென்றால் தான் மக்கள் பிரச்சனையை அழுத்தமாக பேச முடியும். மக்களின் பிரச்சனையை பேச அதிக நேரமும் கிடைக்கும். அதற்காக, இரட்டை இலக்கத்திலாவது சட்டசபை உறுப்பினர்கள் தேவை. எனவே தான் அதிக இடங்களை கேட்கிறோம். பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *