சமஸ்தான வரலாற்றின் பூமி என்றழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டத்திலே, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அ.வெங்கடாசலம் என்பவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஊர் பேர் தெரியாத மர்ம நபர்களால் அநியாயமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு இன்னும் புதிராக இருந்துக் கொண்டிருக்கையில், தற்போது அவரது குடும்பத்தில், மீண்டும் ஒரு கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது. மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்திற்கு மனம் கவர்ந்த மனைவி ஒன்றல்ல, இரண்டு பேர் உள்ள நிலையில், முதல் மனைவியின் மகன் ராஜபாண்டியன் அதிமுகவில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
மற்றொரு மனைவியின் மகனான ராஜராஜன் விவசாயம் செய்து வந்தார். குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பட்டு விட்ட போதிலும், ராஜராஜனுக்கு ஒதுக்கப்பட்ட சொத்தில் அவரை ஈடுபட விடாமல் ராஜபாண்டியன் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சொத்துப் பிரச்சினை காரணமாக இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நாட்களாகவே கடுமையான வார்த்தைப் போர், கைக்குத்து, வாய்க்குத்து தொடர்பான மோதல்களும் வாக்குவாதங்களும் நிலவி வந்தன. ஒருகட்டத்தில் தான் பார்த்துப் பார்த்து பரிமரித்து வசித்து வந்த ராஜராஜன் வீட்டை ராஜபாண்டியன் பூட்டிவிட்டதால்,
ராஜராஜன் எங்கு, யார் யாரிடம் சென்று தன் அண்ணன் தனக்கு இழைக்கும் அநீதிக்கு முறையிடுவது என்று அறியாமல், புரியாமல், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பல நாட்கள் தன் வீட்டின் வாசலிலேயே வீட்டை நாய் காப்பதுபோல் அந்த வீட்டின் வெளியே தங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
இங்குதான் ஒரு மனிதன் ஒரு மனிதன்மேல் வைத்திருக்கும் இரக்க குணம், அதுவும் சொந்த தம்பியின் மீது அண்ணன் காட்டிய கோர முகம் இங்கு இறந்து போனது. அவர் உடல் உயிருடன் இருப்பினும், அவர் ஆன்மா அப்போதே எமலோகத்துக்கு சென்றுவிட்டது. அதன்பின்னர் காற்று, மழை, கடுமையான வெயில் என்ன செய்வதென்று அறியாமல், தன் மனம் கவர்ந்த மனைவி மற்றும் குழந்தைகளின் உணவு, உடை, இருப்பிடம் கேள்விக்குறியானதையடுத்து, ஒரு முடிவு எடுத்த ராஜராஜன்,
கடந்த சில மாதங்களாக உறவினர் வீட்டில் தங்கி வந்துள்ளார். சும்மா வீதியில போற வம்பை விலைக்கு வாங்குவதுபோல், மீண்டும் தனது உயிரை பணயம் வைக்க தனது வீட்டிற்கு வந்தபோது, ஆத்திரமடைந்த ராஜபாண்டியன் அவரை அரிவாளால் ஓட ஓட விரட்டி விரட்டி சரமாரியாக உடலில் எல்லா பாகங்களிலும் சதக் சதக் என்று வெட்டியுள்ளார்.
தன் உடலில் மிஞ்சியிருக்கும் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அருகிலிருந்த ஒரு வீட்டிற்குள் தப்பி ஓடிப் பதுங்கிய ராஜராஜனை, நீ ஓடுனா மட்டும் உன்னை விட்டுறுவேனா, அப்படி விடாமல் துரத்திச் சென்ற ராஜபாண்டியன், கூர்மையான கத்தியால் சதக் சதக் என்று குத்தியதுடன், அங்கிருந்த இண்டியன் சிலிண்டரைத் தூக்கி அவரது தலையில் தொமாறு தொமாறு என்று பலமுறை போட்டு கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தப்பியோடினார்.
என்னடா இது, பூகம்பம் வெடிப்பதுபோல் சத்தம் கேட்கிறது என்று ஓடோடி ஓடோடி வந்த அக்கம் பக்கத்தினர், அங்கு வந்து பார்த்தபோது, ராஜராஜன் வெத்தலைப் பாக்கும் போட்டு துப்பிய சிவப்பு எச்சிலைப்போல் ரத்தக் கறை அங்கும் இங்கும், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தார்.
இச்சம்பவத்தைக் வன்மையாகக் கண்டித்து, பட்டுக்கோட்டை – புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, விவகாரம் பெரிதாவதை உணர்ந்த கொலையாளி, காவல்துறையினர் கையும் களவுமாக அங்குமிங்கும் சுற்றிப் பிடிப்பதற்குள், தானே சென்று காவல் நிலையத்தில் உயிருக்கு தஞ்சம் கேட்டு, கொலையில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி ராஜபாண்டியன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நேரில் சென்று, என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று தன் உயிருக்கு பிச்சைக் கேட்டு சரணடைந்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை தீவிரமாக நடத்தி வருகின்றனர். இன்னும் என்ன தீவிர விசாரணை? கொலையாளி சிக்கிக் கொண்டான். கொன்றவனை கோர்ட்டில் நிறுத்தி, கடுங்காவல் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


