சென்னை பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறுத்து அறிவிக்க வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தில் 3 கிலோமீட்டர் நீளத்திற்குச் சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டம் வெள்ளத்தை ஏற்படுத்திப் பேரழிவை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இத்திட்டத்தை தி.மு.க. அரசு தொடங்கிய போதும், இப்போதைய த.வெ.க. அரசு தொடர்ந்து செயல்படுத்துவதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தடுப்புச் சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்தப் பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர் பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்திற்குச் செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறுத்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதைச் செய்யத் தவறினால் பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

