V. Senthil Balaji: அண்ணனைத் தொடந்து தம்பியும் கைது!

Advertisements

V. Senthil Balaji | R V Ashok Kumar | ED | Kochi | Arrest

தப்பிக்க முயன்றபோது தட்டி தூக்கிய போலீஸ்… அண்ணனைத் தொடந்து தம்பியும் கைது!

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக் குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து அவரைக் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய நீதிமன்ற காவல் வரும் 25ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இததற்கிடையே சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனைத் தொடர்ந்து அசோக் குமார் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அவரது மனைவி பெயரில் கட்டப்பட்டு வரும் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது. கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக் குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *