
செக்கிழுத்த செம்மல் … கப்பலோட்டிய தமிழன் என்றெல்லாம் அன்பாக அழைக்கபட்ட வ.ஊ.சி. அவர்கள் இந்திய சுதந்திர போராட தியாகி அவர்களின் நினைவுத் தினம் இன்று…!
வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர். அந்தக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்த வழக்கறிஞரும் இவர் தான். இவர் ஆங்கிலேய கப்பல்களுக்குப் போட்டியாகத் தூத்துக்குடி முதல் கொழும்பு வரை கப்பல் போக்குவரத்தை துவங்கினார். இதனால் இவர் “கப்பலோட்டிய தமிழன்” என்று அழைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை மற்றும் பரமாயி அம்மாள் என்கின்ற தம்பதிக்குச் செப்டம்பர் 5, 1872ஆம் ஆண்டு மூத்த மகனாகப் பிறந்தார்.
வ.உ.சிக்கு கல்வி கற்பதில் ஆர்வம் அதிகம். தனக்கு தெரிந்த ஒரு அரசாங்க அதிகாரிமூலம் ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். பிறகு தனது 14ஆம் வயதில் தூத்துக்குடி சென்று பயின்றார். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி சென்று கல்வி கற்றார்.
இவர் குற்றவியல் [crime] மற்றும் உரிமையியல் [rights] ஆகிய பிரிவில் சட்டத்தில் தேர்ந்தார். பிறகு ஓட்டப்பிடாரத்தில் தனது வழக்கறிஞர் தொழிலைத் துவங்கிய இவர் ஏழைகளுக்காக இலவசமாக வாதாடினார். மேலும் சிறப்பாக வாதாடிப் பல வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் நீதிபதிகளின் நன்மதிப்பினையும் பெற்றார்.
வ.உ.சி எப்போது சென்னை சென்றாலும் பாரதியாரை சந்திப்பது வழக்கம். ஏனெனில் இவரது தந்தையும் பாரதியாரின் தந்தையும் நல்ல நண்பர்கள். அதுபோன்றே இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம் அவ்வாறு பேசும்போதெல்லாம் நாட்டினை பற்றியே அதிகமாகப் பேசுவார்களாம்.
வ.உ.சி ஆங்கிலேயர்களுக்குப் போட்டியாகக் கப்பல் போக்குவரத்தினை துவங்கினார். தூத்துக்குடி முதல் கொழும்பு வரை கப்பலை இயக்கினார். மக்கள் அனைவரும் தங்களது வியாபார சரக்குகளைச் சுதேசி நிறுவனம் இயக்கிய கப்பலில் கொண்டுவர ஆரம்பித்தனர். இதனால் கப்பல் நிறுவனம் வளர ஆரம்பித்தது கப்பல்களும் அதிகரிக்க துவங்கியது. நாடு முழுவதிலும் இருந்து வ.உ.சி அவர்களுக்கு ஆதரவு பெருகியது. மேலும் இந்தத் தீர்ப்பினை எதிர்த்துப் பலரும் மேல்முறையீடு செய்யத்துவங்கினர். இந்நிலையில் கோவையில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். உணவு, உடை மற்றும் வேலையென அனைத்திலும் மிக மோசமாக நடத்தப்பட்டார். மேலும் சிறையில் அவர் கல் உடைத்தார், புல் வெட்டினார் மேலும் மாடுகள் இழுக்கும் செக்கினை அவர் சுமந்து இழுத்தார். இதுபோலப் பல கொடுமைகளை அவர் அனுபவித்தார்.
இந்நிலையில் மேல்முறையீடு மற்றும் மக்களைப் போராடட்ம போன்றவைகளால் அவரது தண்டனை காலம் குறைக்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். வ.உ.சி தொடர்ந்து மக்களுக்காகத் தனது போராட்டத்தினை நடத்தி வந்தார் . பிறகு வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.
வ.உ.சி நினைவுச் சின்னங்கள்:
ஒட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த வீட்டினை அவரது நினைவு இடமாக மாற்றி அதில் நூலகம் மற்றும் அவரைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் குறிப்புக்கள் என அனைத்தும் அங்கே உள்ளது. மேலும் தமிழம் முழுவதும் பல இடங்களில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மத்திய சிறையில் அவர் இழுத்த செக்கு இன்று சென்னை கிண்டியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு இவரது பெயரினை சூட்டியுள்ளது.


