உத்தரப் பிரதேசம் லக்னோவில் காந்தி சிலைக்கு மரியாதை.!

மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டிப் பல்வேறு மாநிலங்களில் அவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தியுள்ளனர்.

நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் தில்லியில் வழிபாட்டுக் கூட்டத்தில் நாதுராம் கோட்சே என்பவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் நினைவுநாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி உத்தரப் பிரதேசம் லக்னோவில் மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் ஆகியோர் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி சென்னையில் காந்தி மண்டபத்தில் உள்ள அவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *