காஞ்சிப் பட்டுச் சேலையில் கவனம் ஈர்த்த நீடா அம்பானி!

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார். விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.

மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக அம்பானி தம்பதியினர் நேற்று அமெரிக்கா சென்றனர்.

பதவியேற்பு விழாவுக்கு முன் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் வாஷிங்டன் டிசியில் அளித்த இரவு விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்றனர்.

அப்போது டொனால்டு டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

மேலும் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகளிலும் அம்பானி தம்பதி கலந்துகொள்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சிகளில் நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டுச் சேலை அணிந்து வளம் வந்தது பலரையும் கவர்ந்துள்ளது.

அவர் அணிந்திருந்த காஞ்சிப்பட்டு சேலையில், காஞ்சிபுரத்தின் பழம்பெருமை வாய்ந்த கோவில்களின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில், டிரம்ப் விழாவில் காஞ்சிப் பட்டுச் சேலையில் நீடா அம்பானி, மயில், கோபுரங்கள் இடம் பெற்றிருந்தன.

ஸ்வதேஷ் சார்பில் உருவாக்கப்பட்ட இந்தச் சேலை, தேசிய விருது பெற்ற கலைஞர் கிருஷ்ணமூர்த்தியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னரும் பல நிகழ்ச்சிகளில் நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை அணிந்து வளம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *