today rasipalan:இன்றைய ராசிபலன்:15.07.2024

Advertisements

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையான நாளாக இருக்கும். பணியிடம் உங்களுக்குத் திருப்திகரமாக இருக்காது. இதனால் கவலை அடைவீர்கள். துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு உங்களுக்குத் திருப்தியாக இருக்கும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும். மேலும், பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வீர்கள். துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் கடினமான பணிகளைக் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். துணையுடன் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஆன்மிக ஈடுபாடு மன ஆறுதலை தரும். நீங்கள் நம்பிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படுவதால் குறித்த நேரத்தில் பணிகளைச் செய்து முடிக்க இயலாது. துணையுடன் தவறான புரிந்துணர்வு ஏற்படும். பணபுழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்படும்.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு , முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சகபணியாளர்களுடன் குழப்பமான உறவுமுறை உண்டாகும். குடும்ப பிரச்சனை ஒன்றின் காரணமாகத் துணையுடன் வீண் விவாதம் ஏற்படும். கடன் வாங்கவும் நேரிடும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு ஆன்மிக ஈடுபாடு மன ஆறுதலை தரும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். இதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள். துணையிடம் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். இதனால் நல்லுறவை பராமரிக்க முடியாது. பணவரவு திருப்தியாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை ஏற்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மந்தமாகக் காணப்படுவீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளைக் கவனமாகச் செய்ய வேண்டும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பணிகள் அதிகமாகக் காணப்படும். இதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. துணையிடம் நல்லுறவை பராமரிக்க முடியாது. இதனால் கவலை அடைவீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் பதற்ற நிலை ஏற்படும்.

 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி காணப்படும். உங்களிடம் பதட்டமும் வருத்தமும் காணப்படும். பணியிடத்தில் அதிகப் பணிகள் காணப்படும். இதனால் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. துணையுடன் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீரகள். இதனால் நல்லுறவை பராமரிக்க முடியாது. அதிக பொறுப்புகள் காரணமாகப் பணப்பற்றாக்குறை காணப்படும். ஆரோக்கியத்தில் கணுக்கால் மற்றும் தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். துணையுடன் அன்பான வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள்.பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடச் சூழல் சுமூகமாக இருக்கும். உங்கள் பணிகளைத் திறமையாக முடிப்பீர்கள். துணையுடன் நட்புடன் நடந்து கொள்வீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் வயிற்று வலி பிரச்சனை ஏற்படும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு உங்களுக்குச் சாதகமாக இருக்கும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளைக் கவனமாகச் செய்ய வேண்டும். துணையிடம் நல்லுறவு பராமரிக்க விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் தோள் வலி பிரச்சனை ஏற்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *