இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த, ஜூலை 24ஆம் தேதி வரை தடை

இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த, ஜூலை 24ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் உருவானது. எனவே ஏப்ரல் 23 முதல் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதே போல், இந்திய வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் விமானங்களுக்கும் தடை நீட்டிக்கப்பட்டது. மே 23 அன்று அது மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த தடை ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதே போல் பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளியை ஜூலை 24ஆம் தேதி வரை மூடுவதாக இந்தியா அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *