போலந்தின் கிராகோவ் நகரச் சதுக்கத்தில் துப்பாக்கி ஏந்திய ஒருவன் காரில் வந்து சரமாரியாகச் சுட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
போலந்தின் கிராகோவ் நகரின் முதன்மையான சதுக்கத்துக்குக் காரில் வந்த ஒருவன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாகச் சுட்டுள்ளான். இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
காவல்துறையினர் இருவர் உட்பட மொத்தம் 16 பேர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். காயமடைந்தோரில் ஐந்து பேர் வெளிநாட்டவர்கள். இவர்கள் பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தீவிர வலதுசாரிச் சிந்தனை கொண்ட அந்தக் கொலையாளியின் வீட்டில் இரண்டு பெண்கள், ஓர் ஆண் என மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போலந்தில் பொது இடத்தில் மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது ஐரோப்பிய நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

