US Visa: 10 லட்சம் விசாக்கள் பரிசீலனை!

10 லட்சம் விசாக்கள் பரிசீலனை. அமெரிக்க  நுழைவு அனுமதி  பெறுபவர்களில் 10 சதவீதம் பங்கை இந்தியா வகிப்பதாக அம்ரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கொரொனாவுக்குப் பிறகு அமெரிக்க நுழைவு அனுமதி வழங்குதலில் பெரும் பின்னடைவு காணப்பட்டது. இதனால் அமெரிக்கா செல்லக் காத்திருக்கும் இந்தியர்கள் எண்னிக்கை மிக அதிகமானது, சென்ற ஆண்டு 12 லட்சம் பேர்  அமெரிக்க குடியேற்றமல்லாத  நுழைவு அனுமதி பெற்று அமெரிக்கா சென்றனர்.
இந்த வருடம் ஒன்பதே மாதங்களில் 10 லட்சம் பேருக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில், நுழைவு அனுமதியை துரிதப்படுத்த  அமெரிக்க  தூதரகங்களில் அதிகப்படியான ஊழியர்களையும், அதற்கான உள்கட்டமைப்பையும்  மேற்கொண்டுள்ளது அமெரிக்க தூதரகம். இதனால் மிக விரைவிலேயே காத்திருப்போர்பட்டியலில் உள்ளவர்களுக்கு விசா கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *