தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : வெளியான சூப்பர் அப்டேட்.!!

Advertisements

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைச் செயல்படுத்த ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு பணி ஆணை வழங்கியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ என்ற பெயரில் அறிவித்ததது. இதன்படி, “தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம், மென்மையான துணி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெறுபவர், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும், அரசு மருத்துவமனை மற்றும் அரசு சுகாதார மையங்களில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 755 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், குறைந்த விலைப்புள்ளி அளித்து தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70 க்கு 30 என்ற சதவீதத்தில் தமிழக அரசு பணி ஆணையை வழங்கியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *