எதிர்க்கட்சிகள் கூட்டம் – ஆம் ஆத்மி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு அழைப்பு: இரவு விருந்துக்கு சோனியா ஏற்பாடு.

Advertisements

பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஆம் ஆத்மி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு முதல் நாள், விருந்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Advertisements

பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பீஹார் தலைநகர் பாட்னாவில் முதல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் போது, டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக, மத்திய அரசின் அவசர சட்டம் குறித்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கூட்டத்தின் போது பத்திரிகையாளர் சந்திப்பை ஆம் ஆத்மி புறக்கணித்தது. அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், அடுத்து வரும் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என அக்கட்சி கூறியிருந்தது.

இந்நிலையில், வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஆம் ஆத்மி கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிமுக, கொங்குதேச மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ்(ஜோசப்) மற்றும் கேரள காங்கிரஸ்(மணி) ஆகிய கட்சிகளுக்கும் புதிதாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அழைப்பிதழ்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அனுப்பி உள்ளார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தரப்பில், மல்லிகார்ஜூன கார்கேவுடன், சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முதல் நாள், விருந்து நிகழ்ச்சிக்கு சோனியா தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஆம் ஆத்மி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு முதல் நாள், விருந்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பீஹார் தலைநகர் பாட்னாவில் முதல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் போது, டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக, மத்திய அரசின் அவசர சட்டம் குறித்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கூட்டத்தின் போது பத்திரிகையாளர் சந்திப்பை ஆம் ஆத்மி புறக்கணித்தது. அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், அடுத்து வரும் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என அக்கட்சி கூறியிருந்தது.

இந்நிலையில், வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஆம் ஆத்மி கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிமுக, கொங்குதேச மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ்(ஜோசப்) மற்றும் கேரள காங்கிரஸ்(மணி) ஆகிய கட்சிகளுக்கும் புதிதாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான அழைப்பிதழ்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அனுப்பி உள்ளார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தரப்பில், மல்லிகார்ஜூன கார்கேவுடன், சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முதல் நாள், விருந்து நிகழ்ச்சிக்கு சோனியா தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *