கரூர்க் கூட்ட நெரிசல் மரணம் – அரசுப் பணி ரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

கரூர்க் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியதை ரத்துச் செய்த உயர் நீதிமன்ற உத்தரக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2025ஆம் ஆண்டு செப்டம்பரில் கரூரில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற தவெக ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்துக் கரூர்க் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன், சீனி முகமது, சந்தோஷ்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்தப் பணி நியமனங்களை ரத்துச் செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் பார்த்திவாலா, வினோத் சந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியதை ரத்துச் செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *