Mumbai: ஐ.ஏ.எஸ். தம்பதியின் 27 வயது மகள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

Advertisements

தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் அறையிலிருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

மும்பை:மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் விகாஸ் ரஸ்தோகி. மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையில் முதன்மை செயலாளராக உள்ளார். இவரது மனைவி ராதிகா ரஸ்தோகி. இவரும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இந்தத் தம்பதியின் மகள் லிபி ரஸ்தோகி (வயது27). இவர் சட்டப்படிப்பு படித்து வந்தார்.

ஐ.ஏ.எஸ். தம்பதியினர் நரிமன்பாயின்ட் பகுதியில் மந்திராலயா அருகில் உள்ள அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் தூங்கி கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் லிபி ரஸ்தோகி கட்டிடத்தின் 10-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர், உடடினாக அருகில் உள்ள ஜி.டி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு லிபி ரஸ்தோகியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது லிபி ரஸ்தோகியின் அறையிலிருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் அவர் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லையெனக் குறிப்பிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட லிபி ரஸ்தோகி, கல்லூரி படிப்பில் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது. படிப்பில் எதிர்ப்பார்த்த அளவில் வெற்றி கிடைக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் கூறப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தம்பதியின் மகள் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *