
வேண்டாமெனத் தூக்கி எறியும் வெங்காயத்தின் தோலில் இருக்கும் நன்மைகளைத் தெரிந்து கொண்டால் யாரும் அதைக் கீழே போடமாட்டார்கள்.

பெரும்பாலும் சமைக்கும்போது வெங்காயத்தின் தோலை நீக்கி அதைக் கழிவாக அகற்றி விடுவோம். ஆனால், அந்த வெங்காயத்தில் தோலில் தலை முடியை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் மாற்றும் சத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தூக்கி எறியும் வெங்காயத்தின் தோலிலிருந்து தலைக்குத் தடவும் ஹேர் மாஸ், வெங்காய தோல் வாட்டர், வெங்காய தோல் எண்ணெய் முடி வளர்வதற்கு பெரிதும் உதவும் எனக் கூறப்படுகிறது.
இப்படி தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயத்தின் தோலை எப்படி பயன்படுத்துவது எனத் தெரிந்து கொள்ளலாம்.
வெங்காயத்தின் ஹேர் மாஸ்க்:
சமைக்கும்போது நீக்கப்பட்ட வெங்காயத்தின் தோல்களை நன்றாகக் காய வைத்து, அதைப் பொடியாக அரைத்து அதனுடன் கற்றாழை இழைகளைச் சேர்த்து உச்சித்தலை, அடி முடியில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
வெங்காய தோல் வாட்டர்:
நீக்கப்பட்ட வெங்காய தோல்களின் நீர் தலைமுடிக்கு சீரமாகச் செயல்படும். வெங்காய தோல்களை தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்துப் பின்னர் வடிகட்டி அந்த நீரை சில நேரம் குளிர்விக்கப்பட்ட வேண்டும். பிறகு வெங்காய தோலின் நீரை தலைமுடி முழுவதும் தடவி அரைமணி நேரம் ஊற வைத்துத் தலைக்கு ளிக்க வேண்டும். இதனால் தலை முடி ஷைனிங் லுக் கொடுக்கும்.

வெங்காய தோல் எண்ணெய்:
வெங்கயா தோல்களைக் காயவைத்து பொடி செய்து கொண்டு அதனுடன் பாதாம் அல்லது தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய் சேர்த்து ஊறவைத்து தலையில் தடவி குளிக்க வேண்டும். இதனால் முடி நீளமாக வளர்வதுடன் முடி உதிர்வும் குறையும் எனக் கூறப்படுகிறது.
இயற்கை உரமாகும் வெங்காய தோல்:
வெங்காய தோலை கீழே தூக்கி எறியாமல், அதை உரமாகவும் பயன்படுத்தலாம். வீட்டில், மாடி தோட்டம் அல்லது செடிகள் வளர்த்தால் அவற்றிற்கு காய்ந்த வெங்காய தோலை போட்டால் ஒரே நாளில் இயற்கை உரமாக மாறிவிடும்.


